இந்த ஆண்டில் ஒபாமாவிற்கு பிடித்த ஒரே இந்திய படம்! எது தெரியுமா?
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா, நல்ல தலைமைப் பண்பும் நகைச்சுவை உணர்வும் மிக்கவர். இவர் அவ்வப்போது படங்களும் பார்ப்பதுண்டு. அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் அவர் பார்த்து பிடித்த படங்களை பிறரும் பார்க்குமாறு ஒரு பட்டியலை பகிர்ந்துள்ளார். இதில் மொத்தம் 10 படங்கள் உள்ளன.
ஒபாமா பரிந்துரைத்த 10 படங்களில் முதல் இடம் பெற்றிருந்தது ஒரு இந்திய படம், அதுவும் தென்னிந்திய மொழியான மலையாளத்தில் எடுக்கப்பட்ட படமாகும்.
இந்த படத்தின் பெயர், All We Imagine As Light. இதனை பாயல் கபாடியா இயகியிருந்தார். இது சர்வதேச தயாரிப்பாக உருவான படமாகும்.
இந்த ஆண்டின் மே மாதம் நடந்த 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இந்த படம், மலையாளம், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டது.
இந்த அடம், 82வது கோல்டம் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டு படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான பிரிவுகளில் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த படத்திற்கு இந்திய ரசிகர்கள் பெரிதும் வரவேற்பினை கொடுக்கவில்லை என்றாலும் வெளிநாடுகளில் சிறப்பான அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து ஒபாமா இந்த படம் 2024ல் வெளியான படங்களுள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒபாமாவின் லிஸ்டில் இன்னும் 9 படங்கள் இருக்கின்றன. இருப்பினும் அவர் இந்திய படத்தை முதல் இடத்தில் குறிப்பிட்டிருப்பது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.