Google அதிரடி அறிவிப்பு, Google Photos ஸ்டோரேஜ் இனி Free கிடையாது!

Thu, 13 May 2021-5:27 pm,

கூகுள் போட்டோஸ் சேவையின் இலவச வரம்பற்ற ஸ்டோரேஜ் நன்மையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அந்தவகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 15 ஜிபி ஒதுக்கீட்டைக் கைப்பற்றிய பின்னர் உங்களின் ஸ்டோரேஜ் தேவைக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கும். இந்த புதிய மாற்றம் வருகிற ஜூன் 1, 2021 முதல் நடைமுறைக்கு வருகிறது. 

 

இந்த நடவடிக்கை, கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயிலுடன் 30 டிபி வரை கூகுள் போட்டோஸ்களுக்கான கிளவுட் ஸ்டோரேஜைக் கொண்டுவரும் கட்டண சேவையான கூகிள் ஒன் சந்தா அறிமுகத்தின் ஒரு பகுதியாகும்.

கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் போன் பயனர்களுக்கு ஒரு நன்மையை அளித்துள்ளது, ஏனெனில் அவர்கள் இந்த சமீபத்திய மாற்றத்திலிருந்து விலக்கு பெறுவார்கள், மேலும் ஜூன் 1 க்குப் பிறகும் தங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் 'உயர் தரத்தில்' தங்கள் சாதனங்களிலிருந்து பதிவேற்ற முடியும். 

 

நினைவூட்டும் வண்ணம், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூகுள் போட்டோஸ் ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பெரும் புகழை பெற்றது. கூகுள் தனது வலைப்பதிவு இடுகை ஒன்றில், நான்கு டிரில்லியன் புகைப்படங்கள் கூகுள் போட்டோஸ்-இல் சேமிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு வாரமும் 28 பில்லியன் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இந்த இலவச சேவை கூகுளின் இயந்திர கற்றல் வழிமுறைகளை மேம்படுத்த உதவியது. 

இந்த புதிய அப்டேட் பெரும்பாலான கூகுள் புகைப்பட பயனர்களுக்கு எந்தவொரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வராது என்று கூகுள் கூறுகிறது, ஏனெனில் அதன் பயனர் தளத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 15 ஜிபி இலவச ஸ்டோரேஜ் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி “இன்னும் மூன்று வருட மதிப்புள்ள நினைவுகளை சேமிக்க முடியும்” என்று கூறுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link