கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் ஆளிவிதைகளை டயட்டில் சேருங்க..!!
ஆளி விதைகள்: ஆளி விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஆரோக்கியமான புரதங்கள், கொழுப்புகள், கால்சியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அவற்றில் ஏராளமாக காணப்படுகின்றன. இதில் உள்ள இந்த அரிய சத்துக்கள் நீங்கள் ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருக்க உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துவது முதல் உடல் பருமனை குறைப்பது வரை எண்ணற்ற நன்மைகள் அள்ளி வழங்குகிறது.
எலும்பு ஆரோக்கியம்: ஆளிவிதையில் ω-3 கொழுப்பு அமிலங்கள், Ca, P மற்றும் லிக்னன் உள்ளது. இது எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கிறது. ஆளிவிதை எலும்களி அடர்த்தியை அதிகரித்து, அதன் மேற்பரப்பை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள லினோலெனிக் அமிலம் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்கிறது. எலும்பு மெலிதல் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய ஆபத்துகளை குறைக்கிறது.
உடல் பருமன்: ஆளி விதையை உட்கொள்வது உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கு நன்மை பயக்கும். ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி எடை எடையை குறைக்க உதவுகிறது.
மாதவிடாய் வலி: ஆளி விதையை உட்கொள்வது பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளை தீர்த்து, ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்பையும் வலியையும் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கொலஸ்ட்ரால்: இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை மிகவும் பொதுவான பிரச்சனையாகி விட்ட நிலையில், ஆளி விதையை தவறாமல் உட்கொள்வது இதய நோய்கலீல் இருந்து உங்களை பாதுகாக்கும்.
ஆளிவிதையை உட்கொள்ளும் முறை: நீங்கள் பல வழிகளில் ஆளிவிதையை உட்கொள்ளலாம். ஆளி விதையை பழங்கள் அல்லது சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம். அதன் சட்னி வகைகளில் சேர்த்து அரைத்து சாப்பிடலாம். 1-2 டீஸ்பூன் ஆளி விதைகளை தினமும் உட்கொள்வது மிகவும் நல்லது.
ஆளி விதையை பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள் அதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து பானமாக குடிக்கலாம். அல்லது அதனை பொடி செய்து வைத்துக் கொண்டு, கேப்பை கஞ்சி போன்ற உணவுகளில் சேர்க்கலாம். நல்ல ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன் சமநிலைக்கும் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.