ITR சரியான நேரத்தில் தாக்கல் செய்யுங்க... பல வகையில் அது பிளஸ் பாயிண்ட்..!!
ஐடிஆர் சரியான நேரத்தில் தாக்கல் செய்வதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் அரசாங்க விதிகளை சரியாக பின்பற்றுகிறோம் என்பது தான். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். அபராதம் அல்லது சிறை இரண்டும் இதில் அடங்கும். சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்வதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
சரியான நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்வது கடன் அல்லது வெளிநாட்டுக்கு செல்ல விசா பெறுவதை எளிதாக்குகிறது. கடன் கொடுக்கும்போது, வங்கிகள் உங்கள் வருமானத்தைக் கண்டறிய ஐடிஆர் படிவங்களை கேட்கின்றன. விசா விண்ணப்பத்துடன் ITR வழங்குவதன் மூலம், உங்கள் வருமானம் குறித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு விசா பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
ITR என்பது உங்கள் வருமானம் மற்றும் நிதி நிலை பற்றிய நம்பகமான மற்றும் விரிவான அறிக்கை. இதனால்தான் ஐடிஆர் தாக்கல் செய்வது உங்கள் வரி தொடர்பான பொறுப்புகளுக்கு முக்கியமான ஆவணமாகும். சில சமயங்களில் ஐடிஆரை அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அரசு ஆவணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பல வரி செலுத்துவோர் அதிகப்படியான வரி விலக்கு பெற்றதினாலோ அல்லது முன்கூட்டிய வரி டெபாசிட் செய்ததன் காரணமாகவோ, செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெற வேண்டிய நிலை இருக்கலாம். ஆனால் பணத்தைத் திரும்பப் பெற உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியம். சரியான நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்வதன் மூலம், நீங்கள் டெபாசிட் செய்த அதிகப்படியான வரி சரியான நேரத்தில் திருப்பித் தரப்படும்.
ஐடிஆர் தாக்கல் செய்வது வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டில் ஏற்படும் இழப்பை அடுத்த ஆண்டில் குறைக்க அனுமதிக்கிறது. இந்த இழப்பை எதிர்கால வருவாயில் இருந்து கழிக்க முடியும். அதன் மூலம் வரி குறைக்கப்படும். ஷேர் மார்க்கெட் அல்லது வேறு பிசினஸில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு இந்தத் திட்டமிடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஐடிஆர் தாக்கல் செய்யாத நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வருமான வரி அபராதம் விதிக்கிறது. கடைசி தேதிக்குள் உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்தால், இதுபோன்ற அபராதங்களைத் தவிர்க்கலாம். இந்த வழியில் நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் கூடுதல் பணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.
வருமான வரி தாக்கலை (ITR) தொடர்ந்து சரியான நேரத்தில் செய்வது உங்கள் கிரெடிட் சுயவிவரத்தை சிறப்பாக வைத்திருக்கும். உங்களுக்கு கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் நீங்கள் இதற்கு முன் எப்போதாவது வரி செலுத்தியுள்ளீர்களா இல்லையா என்பதைப் சரிபார்க்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் குறைந்த வட்டியில் கடன் பெறுவது எளிதாக இருக்கும்.
அரசு டெண்டர்களைப் பெற நிறுவனங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். அரசாங்கத் துறைகள் நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் அது வரி தொடர்பான விதிகளைப் பின்பற்றுகிறதா இல்லையா என்பதை சரி பார்க்கின்றன. ஒரு நிறுவனம் தனது ITR ஐ தவறாமல் தாக்கல் செய்தால், அதன் நிதி நிலை வலுவாக இருப்பதையும் அது அரசாங்க விதிகளை பின்பற்றுவதையும் காட்டுகிறது.