தமிழ் புத்தாண்டு முதல் சனி மற்றும் கிரகண யோகத்தால் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்
தமிழ் புத்தாண்டில் கிரகண யோகம்: தமிழ் புத்தாண்டில் சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் சூரிய பெயர்ச்சிக்கு பின் மேஷ ராசியில் ராகு-சூரிய சேர்க்கையான கிரகண யோகம் உருவாகிறது. இந்த கிரகண யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷப ராசி: குடும்பத்தில் உங்களுக்கு மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகள் வரலாம். செலவுகள் கூடும். தேவையில்லாத பயணங்கள் நேரிடலாம். தாயுடனான உறவு கெடலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
கன்னி ராசி: விபத்துகளில் பலியாகலாம். இந்த நேரத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். பேச்சில் நிதானம் இருக்காது. சண்டை சச்சரவுகள் வரலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவுகள் கெட்டுப்போகும்.
தனுசு ராசி: வேலை தேடிக் கொண்டிருந்தால், இன்னும் காத்திருக்க வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இக்காலம் சவால் நிறைந்ததாக இருக்கலாம்.
மகர ராசி: குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள். முதலீடு செய்வதை தவிர்க்கவும். செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம்.