ஒரு மாதம் தினமும் இளநீர் குடித்து வந்தால்... மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்..!!
உடல் பருமன்: இளரநீர் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஒரு டம்பளர் இளநீரில் 48 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே இதனை நிறைய குடித்தாலும், நாம் உள்கொள்ளும் கலோரிகள் அதிகரிக்காது. அதோடு, எளிதில் ஜீரணமாகிறது. இது உடல் நீர் சத்தை அதிகரிப்பதிலும் பலன் அளிக்கிறது.
இதய ஆரோக்கியம்: இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் குடிப்பது நன்மை பயக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது என்பதால் இதய செயல்பாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆற்றல் பானம்: இளநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை நீக்குகிறது. இயற்கை கொடுத்த சிறந்த ஆற்றல் பானம் இது. இதில் குறைந்த அளவு சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், எளிதில் ஜீரணமாகும்.
சிறுநீரக கற்கள்: சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் தானாகவே வெளியேறும் வகையில், நிறைய தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், நீங்கள் இளநீரையும் குடிக்கலாம். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கவும், உருவாகும் கற்களை வெளியேற்றவும் இளநீர் உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இளநீர் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்து இன்சுலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மன அழுத்தம்: மனதளவில் அடிக்கடி சோர்வாகவும், சோம்பலாகவும் இருப்பவர்கள், தினமும் இளநீர் குடிப்பது ஒரு சஞ்சீவியாக செயல்படும். ஒரு டம்பளர் இளநீர் அருந்தினால் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இது மன அழுத்தத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
ஜீரண சக்தி: இளநீரில் மாங்கனீசு சத்து ஏராளமாக உள்ளதால், வயிற்றில் வாயு, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கிறது. இது குடல் இயக்கத்தை சீராக்கி, வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது. இளநீர் குடிப்பதால் அஜீரணம் மற்றும் புளித்த ஏப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
உயர் இரத்த அழுத்தம்: இளநீரில் பொட்டாசியம் ஏராளமாக காணப்படுவதால், அதனை அருந்துவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் குறைகிறது.