சர்க்கரை நோயாளிகள் கவலையின்றி சாப்பிடக் கூடிய சில ‘இனிப்பான’ பழங்கள்!

Mon, 16 Oct 2023-9:14 am,

நீரிழிவு நோயாளிகள் என்ன பழத்தை சாப்பிடலாம் என்பது குறித்து அதிக குழப்பங்கள் பலர் மனதில் உள்ளது. இந்நிலையில், இனிப்பாக இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்காத குறிப்பிட்ட 6 பழங்களைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பழமாகும். ஆப்பிள் இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆப்பிளின் கிளைசெமிக் இண்டெக்ஸ் சுமார் 40 ஆக இருப்பதால் அதை சாப்பிடுவதால் நமது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி நல்லதாக என்று கருதப்படுகிறது. தர்பூசணி இனிப்பாக இருந்தாலும், தர்பூசணி சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. ஏனெனில் தர்பூசணியின் கிளைசெமிக் குறியீட்டு அளவும் மிகக் குறைவு. சர்க்கரை நோய் இருந்தாலும் தினமும் தர்பூசணி சாப்பிடலாம். 

சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறிதளவு திராட்சையை உட்கொள்ள வேண்டும். இந்த லேசான இனிப்பு பழம் உங்கள் இனிப்பு பசியை நீக்குவதோடு, சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது. திராட்சையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவாக இருப்பதால், அது இனிப்பாக இருந்தாலும், திராட்சை சர்க்கரையை அதிகரிக்காது.

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதற்கு இனிப்பாக இருக்கும். ஆனால் அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு, எனவே இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால்,  தினமும் ஆரஞ்சு பழத்தை கவலையின்றி உட்கொள்ளலாம்.

மாம்பழம் சாப்பிட மிகவும் இனிப்பானது. ஆனால், அது நமது இரத்த சர்க்கரை அளவை பெரிதாக பாதிக்காது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை சிறிய அளவில் சாப்பிட வேண்டும். சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால், தினமும் அரை மாம்பழம் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சப்போட்டா நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது ஆனால் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் அதிகம் பழுத்த சப்போட்டாவை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link