சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்கள்
பெர்ரி பழங்களை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். இவற்றில் ஏராளமான ஆன்டி-ஆக்சிடன்டுகளும், நார்ச்சத்தும் காணப்படுவதால் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சூப்பர் பழமாகக் கருதப்படுகிறது.
செர்ரி பழங்களில் வீக்கத்தை எதிர்த்து போராடக்கூடிய பண்புகள் இருக்கிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்டுகளும் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே செர்ரி பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
நீரழிவு நோயால் பாதிக்கப்படவர்களுக்கு பீச் பழங்கள் சிறந்த தேர்வாகும். பீச் பழத்தில் வைட்டமின் C மற்றும் பொட்டாசியம் சத்து ஏராளமாக உள்ளது. அதே சமயத்தில் செல்களில் இருக்கக்கூடிய திரவ அளவுகளை சரியான பராமரிக்க பொட்டாசியம் உதவும்.
ஆப்ரிக்காட் நீரழிவு நோயாளிகளுக்கு அற்புதமான உணவாகும். வைட்டமின் ஏ நல்ல கண் பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அதோடு ஆப்ரிக்காட் பழத்தில் நார்ச்சத்தும் காணப்படுகிறது.
ஆரஞ்சில் வைட்டமின் C சத்து காணப்படுகிறது. இந்த பழத்தில் வைட்டமின் A, C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.