ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்! இதோ பிளான் விவரம்

Sun, 12 May 2024-12:28 pm,

ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): இதுவொரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் மட்டுமல்லாமல், தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, தினசரி 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

 

அதிகபட்சமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கால்களை செய்து கொள்ளலாம். 100 தினசரி எஸ்எம்எஸ்கள் வருகின்றன.

 

இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில், ஆஃபர் பெறும் கஸ்டமர்கள் இந்த சலுகையை பயன்படுத்தலாம். இதுபோக வழக்கமாக கிடைக்கும் அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா கொடுக்கப்படுகிறது.

 

அதேபோல ப்ரீ ஹலோட்யூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு சலுகைகள் போக நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த சந்தா 84 நாட்களுக்கு கிடைக்கிறது. அதேபோல இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

 

ஏர்டெல் ரூ 1199 திட்ட விவரங்கள் (Airtel Rs 1199 Plan Details): இதுவொரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 150 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஃபேமிலி சிம் கார்டு கனெக்சன் சலுகை கிடைக்கிறது.

 

ஆகவே, மேற்கூறிய சலுகைகள் பிரைமரி சிம் கார்டுக்கு கிடைக்கும். அதேபோல இந்த திட்டத்தில் 3 கூடுதல் சிம் கார்டுகளுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, மற்ற சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா (Disney+ Hotstar) மற்றும் விங்க் பிரீமியம் (Wynk Premium) சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாவை போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பிரைமரி சிம் கார்டுக்கு மட்டுமல்லாமல் 4 கூடுதல் சிம் கார்டுகளுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 150 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அதேபோல, கூடுதல் சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 200 ஜிபிக்கான டேட்டா ரோலோவர் சலுகையும் வருகிறது. ஓடிடி சலுகைகளை பார்க்கையில், அமேசான் பிரைம் வீடியோ சந்தா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.

இதுபோக நெட்பிளிக்ஸ் சந்தாவையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இந்த 2 போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கூடுதலாக இணைக்கும் சிம் கார்டுகளுக்கு மலிவான கூடுதல் கட்டணம் இருக்கிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் சாந்தா வேண்டுமானால், இந்த 3 திட்டங்கள் மட்டுமே வருகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link