இதுவரை பிக்பாஸ் சீசன் கோப்பையை வென்றவர் யார்? முழு பட்டியல்

Mon, 19 Dec 2022-9:15 pm,

இந்தி பிக்பாஸ் சீசன் 15 கோப்பையை நடிகை தேஜஸ்வி பிரகாஷ் வென்றார்.

பிக்பாஸ் சீசன் 14 தொடரின் வெற்றியாளராக ரூபினா திலாய்க் முடிசூடினார். 

பிக்பாஸ் சீசன் 13-ன் வெற்றியாளராக இருந்த சித்தார்த் இப்போது நம்முடன் இல்லை. ஆனால், அவரது ரசிகர்கள் இன்னும் அவரை மிகவும் நேசிக்கிறார்கள்.

பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'Sasural Simar Ka'யின் முன்னணி நடிகையான தீபிகா ககர் பிக்பாஸ் 12ல் வெற்றி பெற்றார். 

பிக் பாஸ் சீசன் 11-ல் 'Bhabi Ji Ghar Par Hai' புகழ் ஷில்பா ஷிண்டே வென்றார்.

'Indiawale' புகழ் மன்வீர் குர்ஜார் பிக்பாஸ் சீசன் 10 வெற்றியாளராக ஆனார்.

ரியாலிட்டி ஷோக்களின் ராஜா என்று அழைக்கப்படும் பிரின்ஸ் நருலா பிக்பாஸ் சீசன் 9-ன் வெற்றியாளராக இருந்தார். 

பிக்பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளரானார் கவுதம் குலாட்டி. 

பிக்பாஸ் சீசன் 7ல் கௌஹர் கான் கோப்பையை வென்றார். அதன் பிறகு பல இந்தி படங்களில் கௌஹர் நடித்தார்.

'Kasautii Zindagi Kay' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோமோலிகாவாக நடித்த ஊர்வசி தோலாகியா, பிக்பாஸ் 6-ல் வெற்றி பெற்றார்.

ஜூஹி பர்மர் 'பிக் பாஸ் 5' வெற்றி பெற்றார். 

பிக்பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளரான டிவி நடிகை ஸ்வேதா, 2010-ம் ஆண்டு பிக்பாஸ் கோப்பை மற்றும் ரூ.1 கோடி பரிசுத் தொகையை வென்றார்.

2009-ம் ஆண்டில், பிக் பாஸ் சீசன் 3-ன் வெற்றியாளர் நடிகர் விந்து தாரா சிங் ஆவார். இந்த நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் சீசன் 2வின் வெற்றியாளரான அசுதோஷ் கௌஷிக் மிகவும் பிரபலமானார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் பாலிவுட் நடிகர் ராகுல் ராய் வெற்றி பெற்றார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link