அருமையான வாழ்க்கைக்கு கேரண்டி தரும் கஜலக்ஷ்மி ராஜயோகம்! குரு-சுக்கிரன் இணைந்தால் கொண்டாட்டம் தான்...
மே மாதம் கஜலக்ஷ்மி யோகம் உருவாகப் போகிறது, 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் ராஜயோகம் இது. ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் இயக்கமும், அவற்றின் பரிவர்த்தனையும் இருக்கும் இடமும் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்குக் காரணமாகிறது. அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் கிரக மாற்றங்களால் அவ்வப்போது தோஷங்களும் யோகங்களும் ஏற்படுகின்றன.
கஜலட்சுமி ராஜயோகம் மே 1 ஆம் தேதி ரிஷப ராசிக்கு குரு பகவான் மாறிய பிறகு, மே 19 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைவதன் காரணமாக கஜலக்ஷ்மி யோகம் உண்டாகும். யானை பலத்தை தரும் கஜலக்ஷ்மி யோகம் சுபமான பலன்களைப் பெறப் போகும் ராசிகளில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா? தெரிந்துக் கொள்ளுங்கள்
துலாம் ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமையை மேம்படுத்த கஜலக்ஷ்மி ராஜயோகம் வந்துவிட்டது. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல காலம் இது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு இருக்கும். வாழ்வில் வசந்தம் வீசும் காலம் இது.
தனுசு ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்து சேர்க்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சனைகள் வந்தாலும், பின்வாங்காமல் இருக்கும் மனவலிமையையும் இந்த யோகம் கொடுக்கும். வாழ்வில் வசந்தம் வந்து சேரும், திருமண யோகம் கைகூடும்.
சிம்ம ராசிக்காரர்கள் கஜலக்ஷ்மி யோகத்தால் மகிழ்ச்சியடையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். கடினமாக உழைத்தால் வெற்றி என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கஜலக்ஷ்மி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். குடும்பத்திலும் வாழ்க்கைத் துணையுடனும் பிணைப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்யும் வாய்ப்புகள் தென்படுகின்றன. வேலையில் பதவி உயர்வு கிடைப்பதுடன் சம்பள உயர்வும், நிதி ஆதாயமும் அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது