IND vs SL : கவுதம் கம்பீரால் 27 வருஷத்துக்குப் பிறகு இந்திய அணிக்கு கிடைத்த அவமானம்...!

Wed, 07 Aug 2024-10:58 pm,

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முதல் போட்டி டையில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வென்றிருந்தது.

அதனால் இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. தோற்றால் தொடரை இழக்க வேண்டும், வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலையில் தான் ரோகித் சர்மா படை விளையாடியது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் இந்திய அணி ஜொலிக்கவில்லை. குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டுபோல் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறிவிட்டனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் இப்படி மோசமான ஆடினார்கள் என்றால் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அந்த மோசமான ஆட்டம் தொடர்ந்தது.

பிளேயிங் லெவனை பார்த்தால் இந்திய அணி மிகப்பெரிய பேட்டிங் பட்டாளத்துடன் இருப்பதுபோல் தெரியும். அதனால் ஈஸியாக வெற்றி பெறும் என்று தான் கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்தார்கள்.

ஆனால் நடந்தது வேறு. ஏதோ உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் இருந்தது. விராட், ரிஷப், ஸ்ரேயாஸ், கில், அக்சர், ரியான் பராக், ஷிவம் துபே என ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடவில்லை.

அதேநேரத்தில் பேட்டிங்களில் ஓரளவுக்கு ஆடிய இலங்கை அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் இந்திய அணியை சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தி இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் போட்டி தொடரை வென்றது.

இலங்கை அணிக்கு பயிற்சியாளராக ஜெய்சூர்யா பொறுப்பேற்ற முதல் தொடர் இது. இந்திய அணிக்கு கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடர் இது. இதில் கம்பீரை விட அனுபவம் மிக்க ஜெய்சூர்யா சாதிக்க, கவுதம் கம்பீர் சறுக்கியுள்ளார். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link