கெளதம் காம்பீர் வம்பிழுத்த சண்டைகள்: விராட் கோலி முதல் அப்ரிடி வரை
20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளை இந்தியா வென்றபோது, அணியில் இருந்த கௌதம் காம்பீரை சுற்றி எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.
கிரிக்கெட் களத்திலும் சரி, வெளியிலும் சரி ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிக்கும் அவர், எதிராளிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என நொடிநொடிக்கு சிந்தித்துக் கொண்டே இருப்பார்.
கிரிக்கெட் களத்தில் பல முறை சண்டையிட்டிருக்கும் காம்பீர் ஒருமுறை கம்ரான் அக்மலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரையும் தோனி தலையிட்டு சமாதானப்படுத்தினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியின் போது, கௌதம் கம்பீர், ஷாகித் அப்ரிடியுடன் கடும் தகராறில் ஈடுபட்டார். சிங்கிள் ஓட்டும் போது அவருடன் மோதினார். இதனால் இருவரும் காரசாரமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.
2013 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய காம்பீர், ஆர்பிசி அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியுடன் கடும் சொற்களை கொண்டு வாக்குவாதம் செய்தார். இந்த சண்டை பெரும் பிரச்சனையாக மாறியது.
இதேபோல் மற்றொரு ஐபிஎல் போட்டியின்போது நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி வாக்குவாதம் செய்து கொண்டனர். போட்டிக்குப் பிறகு காம்பீர் அதற்கு விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்தார். இது ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை வரை சென்றது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு, எல்எல்சி அணிகளான இந்தியன் கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியின் போது ஸ்ரீசாந்த் மற்றும் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர்கள் தலையிட்டு இரு வீரர்களையும் பிரிக்க வேண்டியதாயிற்று.