Navaratna: சோம்பேறித்தனத்தை போக்க உதவும் ரத்தினம்! குடிப்பழக்கத்தை ஒழிக்கும் மலாக்கிட்

Sat, 19 Feb 2022-5:17 pm,

தவறான தொடர்புக்கு கிரகங்களே காரணமாகின்றன. இந்த பழக்கத்திற்கு முக்கிய காரணம் மோசமான சனி மற்றும் சந்திரன். நீல ரத்தினத்தின் உதவியுடன் கெட்ட தொடர்புகளை அகற்றலாம். இந்த ரத்தினத்தை இடது கையின் நடுவிரலில் வெள்ளி மோதிரத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த ரத்தினத்தை அணிய வேண்டிய நாள் சனிக்கிழமை.

ஜாதகத்தில் பலவீனமான செவ்வாய் அல்லது சூரியன் இருப்பதால், ஆற்றல் குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் சோம்பேறியாகவும் கவனக்குறைவாகவும் மாறுகிறார்.  நவரத்தினங்களில் மாணிக்கம், இதற்கு பயனளிக்கும். வலது கையின் மோதிர விரலில் தங்கம் அல்லது செம்பு உலோகத்தில் மாணிக்கம் செய்த மோதிரம் அணிவது செவ்வாய் மற்றும் சூரியனை பலப்படுத்தும். முதன்முறையாக அணியும்போது ஞாயிற்றுக்கிழமையன்று அணிய வேண்டும்.

 

தீய கிரகங்களின் தாக்கத்தால் பேச்சும் இயல்பும் கெட்டுவிடும். வியாழனின் சுப பலன் காரணமாக, பொறுமை மற்றும் பேச்சு நன்றாக இருக்கும். குரு பகவானை வலுப்படுத்துவதன் மூலம் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்தலாம்.   குருவை வலுப்படுத்த புஷ்பராகம் அணியலாம். இந்த ரத்தினத்தை வலது கையில் தங்கம் அல்லது பொன்னிற உலோகத்தில் செய்த மோதிரத்தில் பொதித்து ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.

ராகு மற்றும் சனி தோஷம் ஒரு நபரின் போதைப்பழக்கத்திற்கு வழிவகுக்கிறது. போதைப் ழக்கத்திலிருந்து விடுபட மலாக்கிட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பச்சை நிறத்தில் ஒளி ஊடுருவாத வகையில் இருக்கும் மலாக்கிட் கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து இடது கையில் அணிய வேண்டும். முதன்முறையாக அணியும்போது புதன்கிழமையன்று அணியவும்.

ஜோதிடத்தின் படி, இந்த ரத்தினங்களின் உதவியுடன், வாழ்க்கையில் உள்ள அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் விடுபட முடியும். ஆனால் அத்துடன் சேர்த்து விழிப்புணர்வும் அவசியம். அப்போதுதான் இந்த ரத்தினங்கள் தங்கள் மாயாஜால வித்தையை காட்ட முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link