மகாலட்சுமியின் கருணை மழையால் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்

Sun, 17 Jul 2022-2:00 pm,
Godess Mahalakshmi very kind to People

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இதனாலேயே இவர்களது வாழ்வில் சுக்கிரனின் தாக்கத்தால் ஆடம்பரம், காதல் வாழ்க்கை மற்றும் பண வரவு என அனைத்தும் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள். கடினமாக உழைப்பாளியான ரிஷப ராசியினர் மீது அன்னை லட்சுமி அன்பாக கருணை பாலிக்கிறார்.

 

Godess Mahalakshmi

கடக ராசியின் அதிபதி சந்திரன். கடக ராசிக்காரர்கள் தங்கள் அதிர்ஷ்டம் மற்றும் கடின உழைப்பின் அடிப்படையில் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். இலக்குகளைத் துரத்தும் பழக்கம் அவர்களை மிகவும் பணக்காரர்களாகவும் வெற்றிகரமானதாகவும் ஆக்குகிறது. அன்னை லட்சுமியின் அருளால் அவர்கள் வாழ்வில் எதற்கும் குறைவிருக்காது.

zodiac

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமை  தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். அவர்கள் நல்ல தலைவர்களாக இருப்பதுடன், பெயரும் புகழும் பெறுவார்கள்.  

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். தைரியமும், அச்சமற்றவர்களாகவும் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் ஆபத்துகளைக் கண்டு அஞ்சுவதில்லை. கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் வலிமையால் அவர்கள் பணக்காரர்களாகி எல்லா சுகங்களையும் பெறுகிறார்கள்.

தனுசு ராசியின் அதிபதி வியாழன்.  சுப கிரகமான வியாழனின் அருளால், தனுசு ராசிக்காரர்கள் வேலை செய்து பெரிய வெற்றியைப் பெறுவார்கள். அவர்களுக்கு நிறைய அதிர்ஷ்டம் உண்டு. கூடவே அன்னையின் அருளும் அவர்களுக்கு இருப்பதால் செல்வந்தர்களாகும் யோகமும் தனுசு ராசியினருக்கு உண்டு.

அன்னையின் அருட்பார்வை இருந்தால் மலையும் மடுவாகும் எனும்போது, பிச்சாதிபதியும் லட்சாதிபதியாவார் என்பதில் சந்தேகமே இல்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link