தங்கம், வெள்ளி நகைகளும் அதன் சகுனங்களும்..!!

Tue, 22 Mar 2022-5:17 pm,

தங்க ஆபரணம் கையில் கிடைப்பது அல்லது காணாமல் போவது இரண்டும் கெட்ட சகுனம். இதனால்தான் தங்கம் அல்லது வெள்ளி ஏதேனும் உங்களது கையில் கிடைத்தால், அதை எடுத்து வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். தங்கத்தை இழந்தால், வியாழன் கிரகம்  மூலம் வாழ்க்கையில் உங்களை பாதிக்கும் ஏதேனும் ஒரு விஷயம் நடக்கலாம் என்பதற்கான சகுனம் ஆகும்.

 

இன்று பெரும்பாலானோர் தங்கம் அல்லது வெள்ளி மோதிரத்தை அணிகின்றனர். தங்கம் அல்லது வெள்ளி மோதிரத்தை இழப்பது ஒரு கெட்ட சகுனம். இதனால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

காதணிகள் தொலைந்தால், அதுவும் கெட்ட சகுனம். இந்த சம்பவத்தால், எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம். மேலும், அவமானம் அல்லது அவதூறு ஏற்படலாம்.

வலது கால் கொலுசை தவறவிடுவது சமூக கௌரவம் குறைவதற்கான சகுனம் ஆகும். அதே நேரத்தில், இடது கால் கொலுசு  தொலைந்தால், விபத்து ஏற்படுவதற்கான சகுனம் ஆகும்.

வளையல் தொலைந்தாலும்,  ஒரு கெட்ட சகுனம். வளையல் இழந்தால் கௌரவம் குறையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link