Gold Rate: தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு; தங்கம் விலை ₹10,000 குறைந்தது

Thu, 11 Feb 2021-10:22 pm,

நகைகளை வாங்க அல்லது செய்ய தற்போது பொன்னான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு குறைய தொடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய ஆண்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது. வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் பல

கொரோனா காலத்தில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளனர். இதனால் விலைகள் பெருமளவில் அதிகரித்தன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தங்கம் பத்து கிராமுக்கு 56,191 ரூபாயாக இருந்தது. வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ.78,000 கிடைத்தது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில மாதங்களில் ஒரு பெரிய அளவில் மாற்றம் இருந்தது. பிப்ரவரி 4 ஆம் தேதி, எம்.சி.எக்ஸில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 7 மாத காலத்தில் குறைந்த அளவாக ரூ.46611  என்ற அளவில் இருந்தது. 

பிப்ரவரி 1 ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 12.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

தங்கக் கடத்தலைத் தடுப்பதற்காக சுங்க வரியை அரசு குறைத்துள்ளது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link