Good News: தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி.... மேலும் சரிய அதிக வாய்ப்பு..!!!

Tue, 10 Nov 2020-2:45 pm,

சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று இரவு வர்த்தக முடிவில் 1,44,488 ரூபாயாக இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 1,37,207 ரூபாயால   குறைந்துள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை 10 மணி அளவில் சர்வதேச சந்தையின் ஸ்பாட் கோல்டு ரேட் 1,39,470 ரூபாயாக உள்ளது. நேற்றை விலையை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 5018 ரூபாய் சரிந்துள்ளது.

2013 க்குப் பிறகு ஒரு நாளில் தங்கம் இந்த அளவிற்கு குறைந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய சந்தைகளில் தங்கத்தின் விலை மேலும் கடுமையாக சரியக்கூடும் எனவும் தற்போதைய விலைகள் 5-8 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளனர்.

MCX தளத்தில்  செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி அளவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை டிசம்பர் மாதத்திற்கான ஆர்டரில் 1.32 சதவீகம் வரையில் அதிகரித்து 50,405 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை 2.38 சதவீதம் அதிகரித்து 62,300 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 

இதற்கிடையில், தீபாவளிக்கு முன்பு, சந்தையில் இருந்து குறைந்த விலையில் தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பு வருகிறது. எட்டாம் கட்ட தங்க பத்திரத்திற்கு ஒரு கிராமுக்கு ரூ .5,177 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  2020-21 ஆம் ஆண்டு அரசு தங்கப் பத்திரத் திட்டத்தின் 8 வது கட்ட விற்பனையில் தங்கம் வாங்குவதற்கான  விண்ணப்பங்களை 2020 நவம்பர் 9 முதல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என ரிஸர்வ் வங்கி கூறியுள்ளது.

 

விலை அடிப்படையாகக் கொண்டது. இதன் கீழ், ஒரு கிராமுக்கு ரூ .5,177 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரிஸர்வ் வங்கி கூறியுள்ளது.ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஆன்லைனில் தங்கப் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு பத்திரத்தின் நிலையான விலையில் கிராமுக்கு ரூ .50 தள்ளுபடி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதை பெற முதலீட்டாளர்கள் விண்ணப்பத்துடன் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link