Gold Smuggling in TN coast: ₹4.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் பறிமுதல்

Sat, 12 Dec 2020-10:32 am,

இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard (ICG)) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence (DRI)) அதிகாரிகள் தமிழ்நாடு கடற்கரையில் மன்னார் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடிக் கப்பலில் இருந்து சுமார் ஒன்பது கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். ₹4.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் ஒரு துணிப் பையில் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பை, என்ஜினின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த்து. Sailor என்ற மீன்பிடி படகில் இருந்து இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கையிலிருந்து (Sri Lanka) கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக டி.ஆர்.ஐ (DRI) வட்டாரங்களுக்கு தகவல் கிடைத்தது.  அதனை அடுத்து கடலோர காவல் படையும், வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் (Directorate of Revenue Intelligence) இணைந்து இரண்டு நாள் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மண்டபத்தில் (Mandapam) உள்ள கடலோர காவல்படை மையத்தில் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் தங்கள் படகில் பயணித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர்.  

மன்னார் வளைகுடாவில் தங்கத்தை பெற்றுக் கொண்டு, மண்டபத்திற்கு அருகிலுள்ள மரக்காயர் பட்டினம் நோக்கி படகு சென்று கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளும், தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களும், படகுகளும் மேலதிக விசாரணைகளுக்காக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 

இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்திய கடலோர காவல்படை ராமேஸ்வரம் கடற்கரை அருகே ஒரு மீன்பிடி படகில் இருந்து கடலில் வீசப்பட்ட 15 கிலோ தங்கத்தை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link