இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குரு
அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமான குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சுப பலன்களை அளிக்கும் கிரகமான குரு பகவான் மே 7 ஆம் தேதி அஸ்தமனமானார். அவர் இனி ஜூன் 6 ஆம் தேதி காலை 4:36 -க்கு உதயமாகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு உதயம் அதிகமான நற்பலன்களை அளிக்கும். உங்கள் தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். நீங்கள் பல முக்கியமான பணிகளைப் பெற்று அவற்றை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு உதயம் சாதகமாக இருக்கும். பண வரவு தடையின்றி இருக்கும். செலவுகளும் அதிகரிக்கலாம். ஆனால் இவை சுபச்செலவுகளாக இருக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவது சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
தனுசு ராசியினருக்கு குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கத்தால் ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். தொழில் துறையில் வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். குருவின் நல்ல செல்வாக்கின் காரணமாக உங்கள் நிதி நிலையும் மேம்படும், பண வரவு அதிகமாகும்.
குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.