ஆஹா! ChatGPT உதவியால் 11 கிலோ உடல் எடையை குறைத்த நபர்...

Fri, 14 Jul 2023-8:09 am,

உங்களுக்கு உடல் எடையை குறைக்க நீண்ட நாள் விருப்பமா...? ஆனால் உணவியல் நிபுணரிடம் பணம் செலவழிக்க யோசனையாக உள்ளதா...? கவலையை விடுங்கள் நீங்கள் ChatGPT-யிடம் கூட உடல் எடையை குறைக்க அறிவுரை கேட்கலாம்.

 

உங்கள் உடல்வாகுவிற்கு ஏற்ற டயட் மற்றும் உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்க ChatGPT உதவும் என தெரிவிக்கப்படுகிறது. கிரெக் முஷென் என்ற நபர், ChatGPT உருவாக்கிய டயட்டை பின்பற்றி 11 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார் என கூறப்படுகிறது. 

உடல் எடையை குறைக்க ஓடுவதை கிரேக் விரும்பவில்லை, அதனால் அவர் ChatGPT-இன் உதவியை நாடியள்ளார். ஆரோக்கியமான உடற்பயிற்சி திட்டத்தை அதன் உதவியுடன் உருவாக்கியுள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, கிரெக் வாரத்தில் ஆறு நாட்கள் ஓடிக்கொண்டிருந்தார், மேலும் ChatGPT பரிந்துரைத்த உடற்பயிற்சிகளை ஆர்வத்துடன் செய்து வந்துள்ளார். இதன்மூலம், அவர் எதிர்பார்த்தது போல் 11 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். 

கிரெக் முதலில் AI உருவாக்கிய டயர் திட்டத்தை நம்பவில்லை. இந்த திட்டம் குறுகிய, தொடர்ச்சியான செயல்பாடுகளை எளிதாக இயக்குவதற்கு பரிந்துரைத்தது. தொடக்கத்தில், அவர் வீட்டின் கதவுக்கு அருகில் அவர் ஓடுவதற்கு பயன்படுத்தும் காலணிகளை வைக்க ChatGPT மூலம் அறிவுறுத்தப்பட்டார். மூன்றாவது நாளில், அவர் சில நிமிடங்கள் மட்டுமே ஓடினார்.

 

ChatGPTயின் அணுகுமுறை சரியானது என்று உடற்பயிற்சி உடலியல் நிபுணர் மெக்கன்கி தெரிவித்தார். ஆரம்பநிலையில் உள்ள நபர்கள் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்த்து, காயங்களைத் தடுக்க மெதுவாக முன்னேற வேண்டும் என்றார். உடற்பயிற்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் ஓட்டப் பழக்கத்தை உருவாக்க மற்றும் பராமரிக்க சிறந்த வழி மெதுவாக மற்றும் நிலையான வேகத்தில் ஓடுவதாகும் என்றார். 

சிறிய பழக்கவழக்கங்கள் கூட உடற்பயிற்சியை தொடங்கும் சவால்களை சமாளிக்க உதவும் என்று மெக்கன்கி கூறினார். முன் திட்டமிடல், காட்சிப்படுத்தல் மற்றும் தொடர்புடைய பழக்கவழக்கங்கள் மக்களை வீட்டை விட்டு வெளியேறவும், அவர்களின் உடற்பயிற்சிகளில் உறுதியாக இருக்கவும் ஊக்குவிக்கும்.

கிரெக் தனது ஓட்டப்பந்தயத்தை தொடர்ந்தார், மேலும் அவரது அசௌகரியம் குறித்து ChatGPTயிடம் ஆலோசனை கேட்டார். அசௌகரியத்தைத் தவிர்ப்பது சிறந்தது என்று மெக்கன்கி கூறினார். ஓடுவதற்கு முன்னும் பின்னும் தசை இறுக்கம் மற்றும் வலியை மதிப்பிடுவதற்கு Foam Rolling பயன்படுத்துவதை அவர் பரிந்துரைக்கிறார். ஓடிய பிறகு உங்கள் தசைகளில் விறைப்பு அல்லது அதிக வலி ஏற்பட்டால், நீங்கள் அதை மிகைப்படுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம். அதை சரிசெய்ய தசைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தொடர்ந்து Foam Rolling செய்யவும் பரிந்துரைத்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link