லட்சுமி தேவியின் அருளால் இந்த ராசிகளுக்கு நேரடி அருள் கிடைக்கும்
ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மற்றவர்களை விட அதிர்ஷ்டசாலிகள். லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். அறிவு மற்றும் கடின உழைப்பால், இவர்கள் சிறப்பான வெற்றியை அடைவார்கள்.
மிதுனம் - மிதுன ராசியின் அதிபதி புதன் கிரகம். ஜோதிடத்தில், புதன் கிரகம் புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்தின் காரணியாக கருதப்படுகிறது. செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி இவர்கள் மீது கருணை காட்டுவார்.
சிம்மம்- சிம்ம ராசிக்காரர்கள் போராட்டத்திற்குப் பின் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஒழுக்கத்துடன் வாழ்க்கையை வாழ்வார்கள். பொதுவாக விதிகளையும் ஒழுக்கத்தையும் பின்பற்றுபவர்களை லக்ஷ்மி தேவி விரும்புவார். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பை விட்டு ஓட மாட்டார்கள்.
கன்னி - கன்னி ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள், ஒவ்வொரு வேலையையும் மிக அழகாகவும் சிறப்பாகவும் செய்வார்கள். அவர்கள் இலக்கில் மிகவும் தீவிரமானவர்கள். இவர்கள் மீது லட்சுமியின் அருள் இருக்கும். செல்வத்துடன், வாழ்க்கையில் மரியாதையும் பெறுவார்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த கிரகம் ஜோதிடத்தில் தைரியத்தின் சின்னமாக விவரிக்கப்பட்டுள்ளது. தைரியசாலிகளுக்கு லட்சுமி தேவி ஆசீர்வாதங்களைப் பொழிவார். அத்தகையவர்கள் தங்கள் தைரியத்தாலும் கடின உழைப்பாலும் பணம் சம்பாதிக்கிறார்கள்.
தனுசு- ஜோதிடத்தின் படி, தனுசு ராசியின் அதிபதி வியாழன் கிரகம் ஆகும். வியாழன் கிரகம் அறிவின் காரணியாக கருதப்படுகிறது. இதனுடன், குரு உயர் பதவி மற்றும் பல்வேறு வருமான ஆதாரங்களுடன் தொடர்புடையவர். குருவின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.