ஒரே மாசத்தில் இத்தனை கிரகப் பெயர்ச்சிகளா? ஐப்பசியில் அனைவரையும் டென்ஷனாக்கும் கிரகங்கள்!
குரோதி ஆண்டு ஐப்பசி மாத கிரகப் பெயர்ச்சிகளில் சூரியன் பெயர்ச்சி முதன்மையானது, அது இன்று நடைபெற்றது. கன்னி சூரியன், இன்று முதல் துலா சூரியனாக மாறினார்
மாதந்தோறும் சூரியன் மாறுவதன் அடிப்படையிலேயே தமிழ் மாத பிறப்பு அமைகிறது. அந்த வகையில் எந்த தமிழ் மாதமாக இருந்தாலும், அதில் சூரியன் பெயர்ச்சி தான் முதலாவதாக இருக்கும்.
இன்று பெளர்ணமி, சந்திரன் முழுநிலவாக வானில் பிரகாசிக்கிறார். ஐப்பசி மாதமே பெளர்ணமி நாளில் துவங்குவது விசேஷம். ஆனால், இந்த ஐப்பசியில் இரு பெளர்ணமிகள் வருவதால் விஷ மாதம் என்று சொல்வார்கள்.
அக்டோபர் 20ம் தேதியன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்கு மாறுகிறார்
அக்டோபர் 22ம் தேதியன்று, புதன் துலாம் ராசியில் உதயமாகிறார்
அக்டோபர் 29ம் நாளன்று புதன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
நவம்பர் ஏழாம் நாளன்று சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசியில் நடைபெறவிருக்கிறது
கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், நவம்பர் 15ம் தேதியன்று வக்ர நிவர்த்தி பெறுகிறார்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது