வக்ர சனியால் இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட லட்சுமி வந்தாச்சு.. இனி அட்டகாசமாய் இருப்பீங்க
அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் சனி, மிக முக்கியமான கிரகமாகவும் உள்ளார். இவர் ஒரு ராசியில் அதிக நாட்களுக்கு தங்கி இருப்பதால், இவரால் உருவாகும் தாக்கமும் அதிகமாக இருக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் ஜூன் 17 அன்று வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். நவம்பர் 4, 2023 வரை சனி கும்ப ராசியில் வக்ர நிலையிலேயே இருப்பார். சனியின் வக்ர நிலை பல வித மாற்றங்களையும், சுப, அசுப விளைவுகளையும் ஏற்படுத்தும்.
ராசிகளில் இதன் தாக்கம்: சனி வக்ர இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: இந்த காலத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் கூடும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்வில் அதிகமான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர இயக்கம் சுப பலன்களை அளிக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். நிதி ரீதியாகவும் ஸ்திரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் அதிர்ஷ்ட தெய்வம் கதவைத் தட்ட வாய்ப்புள்ளது.
மகரம்: சனியின் வக்ர நிலை மகர ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபத்தை தரும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நேரம் இது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும்.
சனி பகவான் பொதுவாக மனிதர்களை பாதிக்கும் ஏழரை சனி, சனி தசை ஆகியவற்றின் தாக்கத்தில் உள்ளவர்கள் அவர் அருளை பெற, கோளறு பதிக, சனி சாலிசா ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லலாம். ஏழைகளுக்கு உதவினாலும் சனி மகிழ்ச்சி அடைகிறார்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.