சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்
2023 ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். 2025 ஆம் ஆண்டு வரை அவர் இதே ராசியில் இருப்பார். இதற்கிடையில் அவர் உதய, அஸ்தமன மாற்றங்கள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்களை மேற்கொள்வார். ஜூன் 29 ஆம் தேதி அவர் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.
ஜூன் 29 ஆம் தேதி நடக்கவுள்ள சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மேஷ ராசியினருக்கு சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் சுபச் செய்திகள் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சனி வக்ர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக, ஜூன் மாதம் ரிஷப ராசியினருக்கு சாதகமாக இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்: சனி பெயர்ச்சியால் சிம்மம் ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை சரியான பாதையில் செல்லும். இவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். இவர்களின் வருமானம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அதிகரிக்கும். நிதி நிலை வலுப்பெறும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இவர்கள் தொழிலில் லாபம் அடைவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை இப்போது செய்து முடிப்பார்கள். இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். தனிப்பட்ட வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். உங்கள் தலைமைத்துவ பண்பால் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் திறமையை வெளிக்காட்டும் நேரம் இது. வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
விருச்சிகம்: சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும்.
கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் யோகம் உள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலை தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.
சனி பகவானின் அருள் பெற இந்த மந்திரத்தை தினமும் கூறி வரலாம்: “நீலாஞ்சன சமாபாசம், ரவிபுத்ரம் யமாக்ராஜம் சாயா மார்தாண்ட சம்பூதம், தம நமாமி ஷனய்ஷ்ச்சரம்”
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.