சீனாவில் மீண்டும் லாக்டவுனா? கொரோனா பரிசோதனைகள் பெருமளவில் அதிகரிப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஷாங்காயில் அமல்படுத்தப்பட்ட கடுமையான லாக்டவுனால், பலருக்கு உணவுப் பற்றாக்குறை மற்றும் சுகாதார சிக்கல்களை ஏற்படுத்தியது. இதனால், தற்போது அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பும், அதிக அளவில் சோதனைகளும் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது (Photograph:AFP)
புதிய BA.5.2.1 துணை மாறுபாட்டின் பாதிப்பு கண்டறியப்பட்ட ஷாங்காய் நகரின் பெரும்பாலான இடங்களில் இரண்டு சுற்று கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளப்படுகிறது. (Photograph:AFP)
மிகவும் பரவக்கூடியதாகக் கருதப்படும் BA.5 வேரியண்ட் உலகெங்கிலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. சீனாவில் கோவிட் வழக்கு ஒன்று கூட இருக்கக்கூடாது என்ற கொள்கையில் இயங்கும் சீன அதிகாரிகள், இந்த வேரியண்ட் முக்கிய அச்சுறுத்தல் என்று கருதுகின்றனர். (Photograph:AFP)
அதிகரித்து வரும் COVID-19 பாதிப்புகளைத் தவிர, ஷாங்காயில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்ப அலையாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (Photograph:AFP)
தற்போது ஷாங்காயில் நகரத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படவில்லை என்றாலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 240 பகுதிகள் நடுத்தர அல்லது அதிக ஆபத்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. (Photograph:AFP)