உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னை வருகை..வெற்றி வாகையுடன் உற்சாகவரவேற்பு!
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பளத்த வரவேற்பு கொடுத்து வரவேற்ற விமான ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆராவாரத்துடன் பட்டாசு வெடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் பங்கேற்று சீனாவின் டிங் லிரென் வென்று இந்த ஆண்டு வெற்றி வாகையை சூடினார்.
விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கு அடுத்தப்படியாக குகேஷ் அந்த இடத்தை பிடித்துள்ளார். இது இவரின் வாழ்க்கை வெற்றியை உயர தீர்மானிக்கும் கருவியாக அமைந்துவிட்டது.
உலக சாம்பியன் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பளத்த பாதுகாப்புடன் வரவேற்று உற்சாகத்துடன் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அங்கத்தில் நாளை பாராட்டு விழா நடக்கவிருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் குகேஷுக்கு ரூ5 கோடி பரிசுத் தொகை வழங்கி வெற்றியை மேலும் சிறப்பித்தனர்.
குகேஷ் பேட்டி: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டிங் லிரேனில் தனது சிறப்பான ஆட்டத்தை ஆடுகள வேட்டையாக வெளிப்படுத்தி வெற்றி கட்டத்திற்கு சென்றதாக மனம் நெகிழ்ந்து பேசினார்.
வெற்றி கோப்ப்பையை தனது வீட்டிற்கு கொண்டு வந்தது மிகவும் வெளிப்படுத்த முடியாத சந்தோஷத்தை இந்த வெற்றி வாகை இவருக்கு கொடுத்ததாக கூறினார். மேலும் இது இவர் வாழ்க்கைக்கு ஊக்கம் மற்றும் புத்துணர்ச்சியை தருவதாகவும் கூறினார்.