குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்
ஜோதிடத்தின் படி, குரு பகவானுக்கு தனி அந்தஸ்த்து உண்டு. அந்த வகையில் குரு கிரகத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கிய நிகழ்வாகும். அதன்படி ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 5.22 மணிக்கு குரு மிருகசீரிட நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். மண்டலம் மாறப்போகிறது. மிருகசிர நட்சத்திரத்தில் நுழைவார்கள்.
மேஷம்: மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைவது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரப்போகிறது. இந்த பெயர்ச்சி இரண்டாம் வீட்டில் நடக்கப் போகிறது. புதிய வழியில் வருமானம் வந்து சேரும். புதிய பொறுப்புகளை பெருமையுடன் பெறலாம்.
ரிஷபம்: குரு ரிஷப ராசியின் லக்ன வீட்டில் பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். வருமானத்தை அதிகரிக்கும். வெளிநாடு செல்லலால், இதனால் சாதகமான சூழல் நிலவும். செல்வம் செல்வாக்கு சேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
கன்னி: கன்னி ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு பெயர்ச்சி, தாராளமான தன வரவு, பதவி உயர்வு, சம்பள உயர்வு என உயர்வை மட்டுமே பெறுவீர்கள். நிதிப் பலன்கள் கிடைக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், திடீர் நிதி ஆதாயமும் உங்களை வந்து சேரும். பங்குச் சந்தியில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை தரும்.
விருச்சிகம்: குரு விருச்சிக ராசியின் ஏழாவது வீட்டிற்குள் பெயர்ச்சி அடைகிறார், இது தொழிலுக்கு வலுவாக ஸ்தானத்தை தரும். திருமண யோகமும் குழந்தை பாக்கிய யோகமும் கைகூடும். தொழிலை விரிவுபடுத்தலாம். நல்ல லாபத்தையும் பெறலாம்.
மகரம்: குரு மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குரு ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்கில் சிக்கித் தவித்துத் கொண்டு இருந்தால் இப்போது தீர்வு பெருகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் சிக்கல்கள் நீங்கும்.
குரு பகவானின் அருள் பெற காயத்ரீ மந்திரத்தை துதிக்கவும் "குரு ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்".
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.