உதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு...
இன்று ஜூன் ஆறாம் நாளன்று மறைந்திருந்த குரு உதயமானார். பிரகஸ்பதி உதயமானதின் தாக்கம் அனைத்து ராசிகளுக்குக்ம் இருக்கும். அதில் சிலவற்றுக்கு நன்மை என்றால், சில ராசிகளுக்கு மத்திமமான பலன்கள் இருக்கும். ஆனால், சில ராசிகளுக்கு பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்
குரு உதயத்தால் பொருளாதாரம் மேம்படும். பணியில் கலைத்திறன் இருக்கும். வேலைகளை முழு நம்பிக்கையுடன் முடிப்பீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் பாதகமான சூழ்நிலைகள் முடிவுக்கு வந்துவிடும்... வளங்கள் குறைவாக இருப்பது போல் தெரிந்த நிலை மாறி இனி எல்லாம் சுபம் தான் என உற்சாகம் பொங்கும்
நிதி நிலைமையைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் பங்குதாரர்களின் ஆதரவுடன் வெற்றிக்கொடி நாட்டலாம். கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பிரபலமாகும் யோகம் கைகூடும். மரியாதை மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.
வேலைக்குச் சாதகமாக இருக்கும் குரு உதயத்தைப் பயன்படுத்தி முழுமையான கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணத் தேவைகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லாத நிலை உருவாகும்
நிதி நிலைமைகள் மேம்படும், மூதாதையர் சொத்துக்கள் வந்து சேரும். பண வரத்து தடையில்லாமல் இருக்கும். பொருளாதார நிலையைப் பற்றி நிம்மதியாக இருக்கலாம் என்ற ஆசுவாசம் ஏற்படும். பெற்றோரின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது
நிதி நிலைமையைப் பொறுத்தவரை சாதகம் என்று சொல்லலாம். ஆனால், பணத்தால் ஏற்படும் மகிழ்ச்சியை விட, நிலம், கட்டிடங்கள் என நிலையான சொத்துக்கள் கொடுக்கும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். வேலை செய்வதில் சில புதிய முறைகளை முயற்சி செய்தால் அதற்கு குருவருள் கிடைக்கும். இன்று அது வித்தியாசமாக தோன்றினாலும், எதிர்காலத்தில் பெரிதும் பாராட்டப்படும் வாய்ப்பு உள்ளது.
செலவுகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். ஆனால், சுபசெலவுகள் அதிகமாகும். சுபமான செலவுகள் தானே என்று அதிகமாக செலவு செய்ய நேரிடும் என்பது தான் குரு உதயத்தினால் உங்களுக்கு ஏற்படும் பின்னடைவு என்றாலும், வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் குரு உதயாமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது