உங்களை நீங்களே காதலிப்பது எப்படி? இந்த 8 தாரக மந்திரங்களை ஃபாலோ செய்யுங்கள்!
உங்களின் மதிப்பும் தகுதியும் உங்களது உடலை வைத்தோ, அழகை வைத்தோ இல்லை என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பிறருக்காக நீங்கள் எதுவாகவும் மாற வேண்டாம். உங்களுக்கு எதுவாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுவாக மட்டும் இருங்கள்.
உங்கள் வாழ்வின் எந்த நிலையிலும், உங்கள் மீது நீங்கள் அதிகமாக நம்பிக்கை வைத்திருங்கள். அப்போதுதான், உங்களுக்கு எது தேவை என்பதும் உங்களுக்கு எது நல்லது என்பதும் உங்களுக்கு தெரியும்.
டாக்ஸிக் ஆன நபர்களை உங்கள் வாழ்வில் இருந்து தூக்குவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஒருவர் உங்களுக்கு பதற்றத்தை, அழுத்தத்தை, மனச்சோர்வை உருவாக்குகிறார் என்றால் அவரிடமிருந்து விலகியிருங்கள்.
பிறரின் வெற்றியும், உங்கள் வெற்றியும் வேறு. எனவே, உங்களை பிறருடன் எப்போதும் ஒப்பிட்டு கொள்ளாதீர்கள்.
உங்கள் வாழ்க்கை குறித்து முக்கியமான கருத்துகளை கூறும் நபர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும். வேறு எவர் தேவையற்ற கருத்தை கூறிக்கொண்டு வந்தாலும் அதை கேட்டுக்கொள்ளலாமே தவிர அதனை முதன்மை படுத்தக்கூடாது.
மனிதர்களாக பிறந்த அனைவருமே வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் தவறிழைத்திருப்போம். அது போல நீங்களும் ஏதேனும் தவறினை செய்திருக்கலாம். எனவே, அந்த தவறை மன்னித்து உங்களிடம் நீங்களே அன்பை தேடும் வழியை பாருங்கள்.
உணர்வுகளை கட்டுப்படுத்துவதும், புறந்தள்ளுவதும் ஒரு நாள் அல்லது ஒரு நாள் உங்களை பாடாய் படுத்தி விடும். எனவே, உங்கள் உணர்வுகள் என்னவோ அதை அந்த தருணத்தில் அப்படியே உணருங்கள். அப்போதுதான் எது நடந்தாலும் அதை கடந்து செல்லும் பக்குவமான மனிதராக மாறுவீர்கள்.
பயத்தை எதிர்கொள்ளாமல் யாராலும் ஒரு புதிய விஷயத்தை செய்து விட முடியாது. எனவே, உங்களை உயர்த்தும் செயல் உங்களை பயமுறுத்தினாலும் அதை உடனே செய்து முடியுங்கள். அப்போதுதான் புதிய கதவுகள் உங்களுக்கு திறக்கும்.