முடி கொட்டுவது ஏன்? நீங்கள் வழுக்கையை தவிர்க்க செய்ய வேண்டியது இதுதான்
முடி உதிர்தல் அல்லது முடி உடைவது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இளைஞர்களிடையே இருக்கும் மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம். முடி வளர வளர, அது வலுவிழந்து பின்னர் எளிதாக விழ ஆரம்பிக்கும். ஆனால் வழுக்கை விழத் தொடங்குகிறது என்பதை ஒரு சில அறிகுறிகள் மூலம் நீங்கள் கண்டறியலாம்.
காலையில் எழுந்தவுடனே தலையணையில் உடைந்த முடி தெரிந்தால் அல்லது குளிக்கும்போது கையில் முடி அதிகமாக வந்தால் அல்லது தலை சீவும்போது முடி வந்து கொண்டே இருந்தால் உங்களுக்கு வழுக்கை விழத் தொடங்குகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். சரி, முடி ஏன் உதிர்கிறது? என்ற கேள்வி முதலில் வரும். அதற்கு 5 முக்கிய காரணங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்.
முடிக்கு வைட்டமின் ஈ, வைட்டமின் டி, புரதம் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் தேவை. இவற்றின் குறைபாடு இருந்தால் முடி உதிரத் தொடங்கும்.
இப்போதெல்லாம், முடி அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்ற ரசாயன அடிப்படையிலான கிரீம்கள் மற்றும் ஹீட்டர் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம். இது குறுகிய காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், ஆனால் நீண்ட காலத்திற்கு தலையில் முடியை கொட்ட வைக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் பல ஹார்மோன் மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும், இதன் காரணமாக முடி உதிர்தல் ஏற்படலாம். ஆனால், இது வழக்கத்தை விட அதிமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இது தவிர பல பெண்களுக்கு இருக்கும் பி.சி.ஓ.எஸ் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக முடிவு கொட்டும்.
சிலர் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்படுகிறார்கள், அதாவது தைராய்டு குறைவு ஏற்படுதல். இதன் காரணமாகவும் முடி கொடுக்கும். நீங்கள் எந்த வகையான ஆட்டோ இம்யூன் நோயையும் எதிர்கொண்டாலும் முடி கொடுக்கும்.
முடிக்கு இரும்புச்சத்து அவசியம், இதற்கு பச்சை இலை காய்கறிகள், விதைகள் மற்றும் நட்ஸ் சாப்பிடுங்கள். புரதத்தைப் பெற, சிக்கன், கடல் உணவுகள், பருப்பு வகைகள், சோயாபீன் போன்றவற்றைச் சாப்பிடுங்கள். வைட்டமின் ஈக்காக சூரியகாந்தி விதைகள், முட்டை, ஆவகோடா பழம் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்
முடிக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது, அதைப் பெற உங்களுக்கு சூரிய ஒளி தேவை. நீங்கள் காலை சூரிய ஒளியில் உட்கார வேண்டும். இது முடியை பலப்படுத்தும். இருப்பினும், உங்கள் தலைமுடியை அதிக சூரிய ஒளி பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதில் கவனம் தேவை.