நிலை மாறும் குரு! ஹன்ஸ பஞ்ச ராஜயோகம் பெறும் ‘சில’ ராசிகள்!
பிப்ரவரி 1, 2023 அன்று குரு 12-18 கோணத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்திற்கு இணையான சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பிப்ரவரி 1-ம் தேதி குருவின் நிலை மாற்றம் காரணமாக ஹன்ஸ பஞ்ச ராஜயோகம் உருவாகும். இந்த யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிகளுக்கு பலன் தரும் என்பதை அறியலாம்.
குரு பகவான் நிலை மாறுவதால் ஹன்ஸ பஞ்ச ராஜயோகம் மகர ராசிகளின் பெயர்ச்சி ஜாதகத்தில் நான்காம் வீட்டில் அமையப் போகிறது. அந்த நேரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண பலன்கள் கிடைக்கப் போகின்றன. இந்தக் காலத்தில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வாகனம், சொத்து போன்றவை வாங்கும் வாய்ப்பு உண்டு. திடீர் பண வர்ஃஅவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சிம்ம ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் ஹன்ஸ பஞ்ச ராஜயோகம் உருவாகி வருகிறது. வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு மங்களகரமான பலனைத் தரும். பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் ஹன்ஸ பஞ்ச ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை வலுவடையும். எதிரபாராத பண வரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். இந்த காலகட்டத்தில் திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)