பார்த்த முதல் நாளே... கமலினி முகர்ஜிக்கு பிறந்தநாள் - எத்தனை வயது தெரியுமா?
கமலினி முகர்ஜி, 2004ஆம் ஆண்டு இந்தியில் பிர் மிலின்ங்கே என்ற படம் மூலம் அறிமுகமானார். அதே வருடத்தில், தெலுங்கில் ஆனந்த் என்ற படத்திலும் நடித்தார்.
தமிழில், 2006இல் வேட்டையாடு விளையாடு படம் மூலம் அறிமுகமானார். படத்தில் குறைவான காட்சிகளுக்கே வந்தாலும், 'பார்த்த முதல் நாளே' பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார்.
பின்னர், தொடர்ந்து தெலுங்கு படத்தில் கவனம் செலுத்திய அவர், 2009இல் காதல்னா சும்மா இல்ல என்ற தமிழ் படத்தில்தான் நடித்தார்.
தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
இதையடுத்து, 2016இல் தமிழில் இறைவி, மலையாளத்தில் புலிமுருகன் என இரண்டு வெற்றி படங்களிலும் நடித்திருந்தார். அதன் பின் அவர், திரைத்துறையில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
கமலினி முகர்ஜி, இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.