பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் என்ன தெரியுமா?
பாகுபலி சொன்னாலே அனைவரின் நினைவுக்கு வருவது ராஜ மாதா, கட்டப்பா, இப்படம் பாகுபலி பகுதி ஒன்றை விட பகுதி இரண்டில் அதிக வசூலை அள்ளிக்கொடுத்தது. பாகுபலி இயக்குநர் ராஜமௌளி இவர் இயக்கும் படம் அனைத்தும் பிரம்மாண்டமான படமாக எடுப்பார்.
பாகுபலி படத்தில் பிரபாஸ் அனைவராலும் அறியத் தொடங்கினார். பிரபாஸ் தாய் மொழி தெலுங்கில் அதிக படங்கள் நடித்தாலும் பெரிதாக ஒன்றும் மக்களால் அறியவில்லை, பிரபாஸ் 2002 யில் தெலுங்கு படம் ஒன்று ‘ ஈஷ்வர்’ படத்தில் முதன்முதலில் அறிமுகமானர். பிரபாஸிற்கு இன்றுடன் 45 வயதாகிறது. ஆனால் இன்றும் இவர் அழகை விட்டுகொடுக்காமல் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
2004 ஆண்டு பாகுபலி பிரபாஸ் தெலுங்கு பட இயக்குநர் சோபன் இயக்கிய ‘வர்ஷம்’ த்ரிஷாவிற்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் ஜெயம் ரவி மற்றும் ஸ்ரேயா சரண் இருவரும் இணைந்து நடித்த ‘மழை’ இப்படத்தை இயக்குநர் ராஜ்குமாரால் தமிழில் இயக்கப்பட்டது.
பாகுபலி படம் ராஜமௌலி இயக்கி 2015யில் வெளியானது. இதில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா செட்டி, ஆகியோர் இணைந்து நடித்த தெலுங்கு படத்தில் மாபெரும் வெற்றிப் படமாகும்.
‘பாகுபலி’ ரம்யா கிருஷ்ணன் நடிப்பிற்கு டஃப் கொடுக்கும் விதத்தில் பிரபாஸ் பாகுபலியில் நடித்துள்ளார். இதில் பிரபாஸிற்கு மேட்சிங் ஜோடியாக அனுஷ்கா செட்டி நடித்துள்ளார். பாகுபலி படத்தில் அனுஷ்காவுக்கும் பிரபாஸிற்கும் கிசு கிசு இருப்பதாக பேச்சுகள் வெளியானது.
அனுஷ்காவிற்கு இதுப்போன்ற கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாகிவிட்டது.அனுஷ்காவை இயக்குநர் பாகுபலி படத்திற்கு நாயகியாக தேர்ந்தெடுத்தற்கு காரணம் அனுஷ்காவின் நடிப்பு திறமை .
பிரபாஸ் ஷாரதா கபூர் இணைந்து நடித்த ‘சாஹோ’ திரைப்படம் மிகப்பெரிய த்ரில்லர் படம். இது திரையுலகில் அதிக வசூலை அள்ளிகொடுத்தது. ஷாரதா கபூர் ஏரளாமான ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. பிரபாஸிற்கு அதிகமான பெண் ரசிகர்கள் உள்ளனர்.
பிரபாஸ் மற்றும் கிருதி சனோன் இணைந்து நடித்த விலைமதிப்புமிக்க படம் ‘ஆதிபுருஷ்’ என்றேக் கூறலாம். இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவுத் இவர் ‘ஆதிபுருஷ்’ படத்தினை 3 டி யில் இயக்கியுள்ளார். கிருதி சனோனனுக்கும் பிரபாஸிற்கும் இப்படத்தில் நெருங்கிய கனெக்ஷன் ஆரம்பித்தது.இதிலிருந்து இருவரும் நெருக்கமான நண்பராக பழகிவிட்டனர்.