சூர்யாவின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது இந்த திரைப்படங்கள் தான்!
2005-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கஜினி' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்த படம் திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி, பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான 'நந்தா' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் சூர்யாவின் நடிப்பு திறமை பிரபலமாக பேசப்பட்டது, இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சிறப்பாக பொருந்தியிருந்தார்.
2008-ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம்' படம் இன்றுவரை பலரின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. காதல், குடும்ப பாசம் என வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
2020ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' படம் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தனது சிறப்பித்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவின் சிறப்பான நடிப்பை பலரும் வியந்து பாராட்டினார்கள்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த 'சிங்கம்' படம் நல்ல வரவேற்பை பெற்று மூன்று பாகங்களாக வெளியாகி வெற்றிநடைபோட்டது.