PF சந்தாதாரர்களே... உங்கள் கணக்கில் விரைவில் வட்டியை வரவு வைக்க தயாராகிறது EPFO!
நீண்ட நாளாக நல்ல செய்தி வர காத்திருக்கும், பிஎப் சந்தாதாரர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வட்டியை கணக்கில் வரவு வைப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிஎஃப் கணக்கில் இதுவரை 8.15% வட்டி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 2023-24 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.25 % என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
EPFO இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்றாலும், மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில், பிஎஃப் கணக்கில் வட்டியை டெபாசிட் செய்யும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு, பிஎப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், வட்டி தொகை வரவு வைக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் EPFO கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்து, அறிந்து கொள்ள டோல் ப்ரீ எண்ணான 996604425 என்ற எண்ணுக்கு, பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுக்கலாம். எஸ் எம் எஸ் மூலம் உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
உமங் செயலி மூலமும் உங்கள் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.