ஐபிஎல் போட்டிக்காக உலக கோப்பையை தவிர்த்த ஹர்திக் பாண்டியா?
உலக கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாடிய போது காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதை வைத்து தான் தற்போது ரோகித் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் ஷமர் ஜோசப் காலில் அடிபட்டு அதனை கண்டு கொள்ளாமல் அணியின் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா காலில் அடிப்பட்ட உடனே உலக கோப்பை தொடரிலிருந்து விலகிவிட்டார்.
அவர் காயத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடி இருந்தால் இந்திய அணி கோப்பையை வென்றிருக்கும்.
ஆனால் ஹர்திக் பாண்டியா தமது உடல் தகுதியை காரணம் காட்டி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொண்டு அரை இறுதிக்கு முன்பாவது இந்திய அணிக்கு திரும்பிருக்கலாம் என்று ரோகித் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக தான் உலகக் கோப்பை போட்டியில் காயத்தை காட்டி பாதியில் விலகி விட்டதாகவும் ரோகித் ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.
காயம் அதிகமாகிவிடும் என்பதால் உலகக்கோப்பை போட்டியை கைவிட்ட ஹர்திக் பாண்டியா எங்கே? ஒரு டெஸ்ட் போட்டியில் அணி வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக தன் காலில் ஏற்பட்ட காயத்தையே பொருட்படுத்தாமல் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் சமர் ஜோசப் எங்கே என்று ரோகித் சர்மா ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
குறைந்தபட்சம் இந்திய அணியில் தற்போது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் தொடருக்காவது திரும்பி இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலகியதற்கு ஹர்திக் தான் காரணம் என்று நம்பப்படும் நிலையில் இரு தரப்பு ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.