ஹர்திக் பாண்டியா - நடாஷா விவாகரத்து 5 முக்கிய காரணங்கள்...!

Fri, 19 Jul 2024-9:44 pm,

ஹர்திக் பாண்டியா - நடாஷா இருவரும் 2018 ஆம் ஆண்டு மும்பையில் நைட் கிளப் ஒன்றில் சந்தித்துக் கொண்டு டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். அப்போது இருவரும் காதலில் விழவே திருமண உறவில் அடியெடுத்து வைத்தனர்.  ஆனால் இங்கேயே சிக்கல் எழத் தொடங்கிவிட்டது.

ஏனென்றால் திருமணத்துக்குப் பிறகு மாடலிங் செய்ய நடாஷாவை ஹர்திக் பாண்டியா அனுமதிக்க மறுத்திருக்கிறார். ஆனால் நடாஷா அதில் உடன்படவில்லையாம். தான் தொடர்ச்சியாக மாடலிங் செய்வேன் என கூறிவிட்டு நடாஷா மாடலிங் செய்து வந்துள்ளார். இது ஹர்திக் பாண்டியாவுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாஷாவுக்கு குழந்தை பராமரிப்பதில் எல்லாம் ஆர்வம் இல்லையாம். மகனை கவனித்துக் கொள்ளுமாறு ஹர்திக் பாண்டியா வற்புறுத்த, இதுவும் இருவருக்கும் இடையே வருத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

 

அடுத்ததாக, கூட்டுக் குடும்ப வாழ்க்கை எல்லாம் நடாஷாவுக்கு என்னவென்றே தெரியவில்லையாம். அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்களை அவரால் சமாளிக்க முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் குடும்பக் கலாச்சாரம் முறைகள் எல்லாம் நடாஷாவுக்கு புதிதாக இருந்துள்ளது. பழக்க வழக்கங்களே முற்றிலும் மாறுபட்டது என்பதால் செர்பியாவைச் சேர்ந்த நடாஷாவுக்கு பாண்டியா குடும்பத்துடன் ஒத்துப்போக முடியவில்லை. 

பார்டி, மாடலிங் என இருந்தவர் திடீரென குடும்ப வாழ்க்கையில் இணைந்து, மீண்டும் மாடலிங் செய்ய கூடாது என போடப்பட்ட கண்டிஷனுக்கு உட்பட்டெல்லாம் நடாஷாவால் இருக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனை எழத் தொடங்கியிருக்கிறது.

 

கடந்த ஒரு வருடமாகவே இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குருணால் பாண்டியாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததற்கு வாழ்த்திய நடாஷா, பாண்டியா என்ற பெயரைக் கூட தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து நீக்கினார்.

பொறுமையாக இருக்கலாம் என பாண்டியா நினைத்திருந்த நேரத்தில் நடாஷா தனது மாடலிங் நண்பருடன் ரூம் எடுத்து தங்க, இனி ஒன்று சேர வாய்ப்பில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் அவர். அதன்பிறகு நடாஷாவுடன் விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டார் ஹர்திக் பாண்டியா.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link