தாய் அணி திரும்பினார் ஹர்திக்... கிடைக்குமா கேப்டன் பதவி - ரோஹித் நிலை என்ன?
குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட்டதாக (ரூ.15 கோடி) மும்பை இந்தியன்ஸ் அணியால் அறிவிக்கப்பட்டது. பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு 'HOME' என்று தலைப்பிட்டு அந்த X பதிவு வெளியிடப்பட்டது.
குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்ட நிலையில், குஜராத் அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக நீடிப்பார் என அறிவிப்பு.
ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கடந்த 2 சீசன்களாக விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளார். 2022 மெகா ஏலத்தை முன்னிட்டு அவர் மும்பையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மும்பை அணிக்காக ஹர்திக் பாண்டியா 7 சீசன்களில் 92 போட்டிகளில் விளையாடி 1476 ரன்களையும், 42 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டலான ஆல்ரவுண்டராக வலம்வந்தார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் திரும்பி வந்துள்ள நிலையில், அவர் சாதரண வீரராக தொடர்வாரா அல்லது கேப்டனாக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரோஹித் சர்மா கேப்டனாக 5 கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெற்றுத் தந்துள்ளார். தற்போது அவருக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை நியமித்தால் ரோஹித் சாதரண வீரராக தொடர்வாரா என்ற கேள்வியும் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கேம்ரூன் க்ரீன் (ரூ.17.50கோடி) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.