Health Alert! பீர் உடன் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்!

Thu, 02 Feb 2023-7:47 pm,

பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம்.  இது பியர் எனவும் அழைக்கப்படுகிறது.  பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது. 

பீர் இல்லாத பார்ட்டி முழுமையடையாது. பீர் குடிப்பது நவீன வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய அங்கமாக ஆகி விட்டது எனலாம். பொதுவாக, பீட்சா, சிக்கன், பக்கோடாக்கள், உலர் பழங்கள் போன்றவை பார்ட்டிகளில் பீருடன் பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், பீர் சாப்பிடும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும். 

பிரெட்டினால் (Bread) செய்யப்பட்ட எதையும் பீருடன் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இரண்டு பொருட்களிலும் ஈஸ்ட் இருப்பதால்,  ஒரே நேரத்தில் அதிக ஈஸ்டை உங்கள் உடலால் ஜீரணிக்க முடியாது. இதன் காரணமாக, உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்

டார்க் சாக்லேட் ஆரோக்கியத்திற்கு  நல்லது தான் என்றாலும், அதை பீர் உடன் எடுத்துக்கொள்வது பிரச்சனைகளை ஏற்படுத்தும். சாக்லேட்டில் காஃபின், கொழுப்பு மற்றும் கோகோ உள்ளது. பீர் உடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

பீருடன் காரமான பொருட்களை உட்கொள்வது அனைவருக்குமே மிகவும் பிடிக்கும் என்றாலும்,  அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காரமான பொருட்களில் கேப்சைசின் உள்ளது. இது வயிற்று எரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

பெரும்பாலானோருக்கு உப்பு சேர்த்த வேர்க்கடலை, உலர் பழங்கள் அல்லதுமற்ற வகை தின்பண்டங்களை  பீருடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். இந்த பொருட்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது நீரிழப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இது எடிமா மற்றும் இரத்த அழுத்தத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

பீர் உடன் பிரஞ்சு பிரைஸ் போன்ற அதிக உப்பு சேர்த்த தின்பண்டங்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது நீங்கள் மது அருந்தும்போது உங்கள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு நிறைந்த பொருட்கள் உங்கள் தாகத்தையும் அதிகரிக்கும். மேலும், பீர் ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது. இது அதிகமாக சிறுநீர் கழிக்க வகை செய்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு விஷயத்தையும் செயல்படுத்தும் முன், சம்பந்தப்பட்ட நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். Zee News அதற்குப் பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link