மாதுளை விதையை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
மாதுளம்பழத்தின் விதையில் அதிகளவு நார்சத்து உள்ளது, இது மலசிக்கல் பிரச்னையை சரிசெய்ய உதவுகிறது. மேலும் மாதுளையின் விதைகள் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தாராளமாக மாதுளம்பழத்தை சாப்பிடலாம். மாதுளை முத்துக்களை சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து வர நல்ல பலனை அடையலாம்.
மாதுளம்பழத்தின் விதையில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளது. எனவே அடிக்கடி இதனை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஃப்ரீ ரேடிக்கிள்களை எதிர்த்து போராடும். துளம்பழ விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது உடலில் வீக்கம், சிவந்து போதல் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.'
இதயம் சம்மந்தமான நோய் பிரச்சனை உடையவர்கள் மிதமான அளவில் மாதுளம்பழ சாறை குடிக்கலாம். மாதுளம்பழ விதை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.