செரிமானம், இதயம், எடை இழப்பு... பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு வேர்க்கடலை!!
)
குளிர்காலத்தில் வேர்க்கடலை (Peanut) நமக்கு சிறந்த சுவையுடன் உடலுக்கு தேவையான கூடுதல் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அவற்றில் மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியன்கள் ஏராளமாக உள்ளன. ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் இதில் நிறைந்துள்ளன. மேலும் வேர்க்கடலைகள் பல நோய்களுக்கு எதிராக நம்மைக் காப்பாற்றுகின்றன.
)
வேர்க்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் எடை குறைப்புக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நார்ச்சத்து நிறைவான உணர்வை அளிக்கின்றது, செரிமானத்தை எளிதாக்குகிறது. இதன் மூலம் நாம் அதிகமான, தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது தவிர்க்கபப்டுகின்றது.
)
வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. காலை மற்றும் மதியத்திற்கு இடையில், அல்லது மதியம் மற்றும் இரவு உணவிற்கு இடையில் பசி ஏற்பட்டால், ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக வேர்க்கடலைகளை உட்கொள்ளலாம்.
இவற்றில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு சில வேர்க்கடலைகள் (சுமார் 7) சாப்பிடுவது எடையை அதிகமாக உயர்த்தாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.
வேர்க்கடலை தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகளின் சிறந்த மூலமாகும். இவற்றின் மூலம் ஒரு சமச்சீர் உணவு பூர்த்தியடைகிறது.
வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியம், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு இதை தினமும் உட்கொள்ளலாம்.
வேர்க்கடலையில் கொழுப்பு அதிகம் இருப்பதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், இவற்றை மிதமாக உட்கொள்ளலாம். இந்த கொழுப்புகள் உண்மையில் ஆரோக்கியமானவை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். அவை கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்தவை, ஆனால் இவற்றால் அதிக அளவில் எடை அதிகரிக்காது. இவற்றை மிதமாக உட்கொண்டால், இந்த கொழுப்புகள் உண்மையில் ஆரோக்கியமானவையாகவே இருக்கின்றன. இதய ஆரோக்கியத்திற்கும் இது அதிக நன்மை பயக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.