ஒயின் பிரியர்களின் கவனத்திற்கு! ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் ‘சில’ நன்மைகள்!
ரெட் ஒயினை அளவோடு பருகுவது ஆரோக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் கேட்டசின்கள், எபிகேட்டசின்கள், ரெஸ்வரேட்ரால் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.
சிவப்பு ஒயின் இரத்த சர்க்கரையை 24 மணி நேரம் வரை குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரெட் ஒயினில் பாலிபினால்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் ஆற்றல் ரெஸ்வெராட்ரோலுக்கு உண்டு.
புற்றுநோய், குறிப்பாக மார்பக மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயுடன் தொடர்புடைய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் சிவப்பு ஒயின் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது என்பது நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒயினில் உள்ள பாலிபினால்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன. அவை HDL அல்லது நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. மேலும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரோல் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நீரிழிவு ரெட்டினோபதி போன்ற கண் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
ஒயின் குடிப்பது ரத்த ஓட்டத்தைத் தூண்டி சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. சரும செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, இளமையை தக்க வைக்கிறது.