காபி, டீ குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்ணவே கூடாது... ஏன் தெரியுமா!
பேப்பர் கப்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல. மிகவும் ஆப்பத்தானது. பேப்பர் கப்பில் மூன்று கப் டீ குடிப்பவர், சுமார் 75,000 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என்று IIT ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளது.
பெரும்பாலும் பிளாஸ்டிக் (பாலிஎதிலீன்) மற்றும் சில சமயங்களில் கோ-பாலிமர்களால் ஆன பொருட்களை கொண்டை மெல்லிய அடுக்கு பேப்பர் கப்களில் பூசப்படுகின்றன.
காகித கோப்பையில் சூடான டீ அல்லது காப்பியை ஊற்றும் போது, மெல்லிய மைக்ரோபிளாஸ்டிக் அடுக்கு கரைந்து, தேநீர் அல்லது காப்பியுடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது.
ஒரு சராசரி நபர் தினமும் பேப்பர் கப்பில், 3 கப் தேநீர் அல்லது காபி குடிக்கிறார் என வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத சுமார் 75,000 சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காகித கோப்பையில் சூடான டீ அல்லது காபி உட்கொள்ளும்போது, உடல்நல பாதிப்புகள் பெரிதும் ஏற்படுகின்றன என்பதோடு சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சுற்று சூழலை பாதிக்காத வகையில் அதே சமயம் உடலை பாதிக்காத வகையில், வாழை இலை, இலைகளால் செய்யப்பட்ட தொன்னைகள், தையல் இலை, போன்றவற்றால் ஆன பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
பேப்பர் கப்களை தவிர்த்து, கரும்பு சக்கையில் தயாரிக்கப்படும் ஒரு முறை உபயோகப்படுத்தும் பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்வோம்.