பேப்பர் கப்பில் தினமும் தேநீர் குடிக்கிறீர்களா? உடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறீர்கள்!

Mon, 09 Nov 2020-2:03 pm,

இது மிகவும் ஆப்பத்தானது. பேப்பர் கப்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல. அவற்றில் மூன்று கப் டீ குடிப்பவர், சுமார் 75,000 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என்று கரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கண்டறிந்துள்ளது.

காகிதக் கோப்பைகளில் பொதுவாக மெல்லிய அடுக்கு ஹைட்ரோபோபிக் பொருளால் பூசப்படுகின்றன. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் (பாலிஎதிலீன்) மற்றும் சில சமயங்களில் கோ-பாலிமர்களால் ஆனது.

கோப்பையில் சூடான தேநீரை அல்லது காப்பியை ஊற்றும் போது, மைக்ரோபிளாஸ்டிக் அடுக்கு கரைந்து, தேநீர் அல்லது காப்பியுடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது.

25,000 மைக்ரான் அளவிலான (10 µm முதல் 1000 µm) மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 100 மில்லி சூடான திரவத்தில் (85 - 90 டிகிரி சி)  கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆகையால், ஒரு சராசரி நபர் தினமும் 3 வழக்கமான கப் தேநீர் அல்லது காபி குடிக்கிறார் என வைத்துக் கொண்டால், ஒரு காகிதக் கப்பில், மனித கண்ணுக்குத் தெரியாத 75,000 சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதனை உட்கொள்ளும்போது, ​​உடல்நல பாதிப்புகள் மிக தீவிரமாக இருக்கலாம் என இந்த ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இவை சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link