ஜிலு ஜிலு ஐஸ் வாட்டரில் இருக்கும் அடக்கமுடியா பிரச்சனைகள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..
குளிர்ந்த நீர்:
குளிர்ந்த நீரை குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. எந்த நீரை குடித்தாலும் உங்கள் உடல் நீரேற்றமாக இருப்பதற்கு உதவும். ஆனாலும், குளிர்ந்த நீரால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படலாம். அவை என்னென்ன தெரியுமா?
சுவாச நோய் பாதிப்புகள்:
அடிக்கடி குளிர்ந்த நீர் குடிப்பதால் தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகலாம். இதனால் சுவாச கோளாறும் ஏற்படலாம்.
ஊட்டச்சத்தை குறைவாக உறிஞ்சுதல்:
குளிர்ந்த நீர் குடிப்பதால், உங்கள் உடல் ஊட்டச்சத்தை வேகமாக எடுத்துக்கொள்ள முடியாமல் போகலாம்.
மைக்ரேன் தலைவலி:
தலையே பிளந்து கொள்ள வைக்கும் அளவிற்கு வரும் தலைவலிதான், மைக்ரேன் தலைவலி. குளிர்ந்த நீர் குடிப்பதால் இது அதிகமாகலாம்.
மெட்டபாலிசம்:
குளிர்ந்த நீரை உட்கொள்வது தெர்மோஜெனீசிஸுக்கு வழிவகுக்கிறது, இதனால் உங்கள் வளர்சிதை மாற்றம் தற்காலிகமாக அதிகரிக்கிறது. இது, உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
சூடான உணவுகள்:
சூடான உணவு சாப்பிடுகையில், குளிர்ந்த நீரை குடிப்பதால் உடல் சமநிலை தவறலாம் என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதய துடிப்பு:
குளிர்ந்த நீரை குடிக்கையில், நம் உடலில் இருக்கும் நரம்புகள் தூண்டலாம். இதனால், இதய துடிப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.
செரிமான கோளாறுகள்:
குளிர்ந்த நீரைக் குடிப்பது உங்கள் இரத்த நாளங்களை சுருங்கலாம். இது வயிற்றில் உணவு உடைவதையும், செரிமானம் ஆவதையும் கடினமாக்குகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)