ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!
ஹேப்பி ஹார்மோன்ஸ்:
நாம் காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து, நமது மனநிலையும் மாறலாம். எனவே, மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்க சில காலை உணவுகளை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?
புரதம் நிறைந்த உணவுகள்:
புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ளலாம். இது, வயிறை முழுமையாக உணர செய்வதால், மன நிலையும் அதிகரிக்கும்.
ஓட்ஸ்:
ஓட்ஸில், ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக இருக்கிறது. இது, உடல் நலன் மற்றும் மன நலனை பாதுகாக்கும்.
பாசிப்பருப்பு சாலட்:
பாசிப்பருப்பில் வைட்டமின் பி சத்துகள் நிறைந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் மன நலனுக்கும் நன்மை பயக்கும்.
பழ சாலட்:
ஆப்பிள், ஆரஞ்சு ஆகிய பழங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகரிக்க உதவும். இதனால், இதை காலை உணவாக சாப்பிடலாம்.
தயிர், தேன் மற்றும் நட்ஸ்:
தயிரை ப்ரோபயோட்டிக் சத்துகள் இருக்கிறது. இதனை, தேன் மற்றும் நட்ஸ் ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.
சியா விதை புட்டிங்:
சியா விதைகளை ஒரு இரவு தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம். இதனுடன் பெர்ரி பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
வாழைப்பழ பாதாம் ஸ்மூதி:
வாழைப்பழமும், பாதாமும் மன நலனை நல்லபடியாக பார்த்துக்கொள்ளும் பன்புகளை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)