Healthy Food Ideas: இந்த 5 உணவுகளை காலை உணவில் சாப்பிட வேண்டாம்
பெரும்பாலான வீடுகளில் பராத்தாவும் ரொட்டியும் காலை உணவாக உண்ணப்படுகிறது. சுவையாக இருக்கும் இவை, உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அதிக எண்ணெயாக இருப்பதால், காலையில் பராத்தா சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதேபோல, ரொட்டியில் கார்போஹைட்ரேட் நிறைய உள்ளது. காலையில் இத்தகைய காலை உணவை உட்கொள்வது வயிற்றில் வாயு பிரச்சனையை அதிகரிக்கும்.
வாழைப்பழம் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இதை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை குறைக்கும். ஆனால் காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடுவது தவறு என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அளவில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும். அதோடு, அமிலத்தன்மை கொண்ட வாழைப்பழத்தை காலையில் சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பாதிக்கப்படலாம்.
தயிரை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் என பெரும்பாலான உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள், உண்மையில் வழக்கமாக மனித உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் தயிரை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அமிலத்தன்மை அதிகம் கொண்ட தயிரை, காலையில் உட்கொண்டால் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும். இது தவிர, பித்தம் மற்றும் சளி அதிகரிக்கும்.
காலை உணவில் தக்காளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தக்காளியில் அதிக அமிலத்தன்மை உள்ளது. அதிகாலையில் இதை உட்கொள்வதால் நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள் மற்றும் பிற புளிப்பு பொருட்களை காலையில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஊறுகாய், சட்னி, எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை காலை உணவில் உட்கொள்ளக்கூடாது. இந்த அனைத்து பொருட்களிலும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தும் அமிலம் உள்ளது.