சுகர் லெவலை சுலபமா குறைக்கும் சூப்பர் உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவை குறைக்க சுகர் நோயாளிகள் கண்டிப்பாக டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
கார்போஹைட்ரேட் அதிகம் இல்லாத காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நார்ச்சத்துகள், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை அதிகமாக இருக்கும் கீரை வகைகள், பச்சை காய்கறிகள் ஆகியவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
பால் மற்றும் பால் பொருட்களில் இயற்கையான சர்க்கரை இருந்தாலும், இவற்றை நீரிழிவு நோயாளிகள் உடலில் சேர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவற்றால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. பால் மூலம் புரதம் மற்றும் கால்சியம் கிடைக்கிறது. பால், பாலாடைக்கட்டி, தயிர் ஆகியவற்றை குறைந்த அளவில் உட்கொள்வது நன்மை பயக்கும்.
மோர்: சர்க்கரை நோயாளிகளுக்கு மோர் ஒரு ஆரோக்கியமான பானமாக கருதப்படுகின்றது. மோரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
பழுப்பு அரிசி, பார்லி, கோதுமை, ஓட்ஸ், தினை போன்ற முழு தானியங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இவற்றின் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) மிகக்குறைவு. ஆகையால், இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
இரத்த சர்க்கரை அளசை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீரிழிவு நோயாளிகள் பப்பாளி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களை சாப்பிடலாம். இவற்றால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது. இவை உடலுக்கு அதிக நார்ச்சத்தையும் அளிக்கின்றது.
கற்றாழை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். கற்றாழையில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. கற்றாழையில் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இது நமது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.