சர்க்கரையில்லைன்னா என்ன? ஆரோக்கியத்திற்கு சுவையூட்டும் மாற்று உணவுகள் இங்கே...
பெண்கள் நாள் ஒன்றுக்கு ஆறு தேக்கரண்டி சர்க்கரையும், களாகவும், ஆண்கள் ஒரு நாளைக்கு ஒன்பது தேக்கரண்டி சர்க்கரை மட்டுமே உட்கொள்வது போதுமானது என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது. ஆனால், நாளொன்றுக்கு நாம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரயின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.
நீரிழிவு அல்லது பிற உடல்நலக் காரணங்களுக்காக சர்க்கரை நுகர்வை குறைப்பவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சிறந்த உணவைத் தேர்வு செய்பவர்கள், உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் என பலரும் இந்த உணவுகளுக்கு மாறலாம்.
நம்பினாலும் நம்பாவிட்டாலும், பேக்கேஜ் செய்யப்பட்ட சூப்கள், சர்க்கரையின் இரகசிய ஆதாரங்களாக இருக்கலாம். எனவே வீட்டில் செய்யும் சூப்களை குடிக்கவும். பேக்கேஜ் சூப் பாக்கெட் வாங்கினால், அதில் உள்ள லேபிளை கவனமாகப் பார்க்க வேண்டும். சூப் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்களுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
பாட்டில் சாலட் டிரஸ்ஸிங்கில் அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலட்களுக்கு சுவை சேர்க்க ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெய் மற்றும் வினிகருக்கு மாறவும்.
வேர்க்கடலை வெண்ணெய் ஆரோக்கியமானது மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இருப்பினும், கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. வணிக ரீதியான வேர்க்கடலை வெண்ணெய் பெரும்பாலும் சர்க்கரைகள், எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள் சேர்க்கப்படுகின்றன. எனவே தேவையற்ற உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க, வேர்க்கடலை வெண்ணெய் மிதமாக உட்கொள்ள வேண்டும்.
கெச்சப் ஆரோக்கியத்திற்குன் கேடு விளைவிக்கும், குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு கெச்சப் பிரச்சனையை ஏற்படுத்தும்.
காலையில் ஒரு கப் இனிப்பு காபியை விரும்பாதவர் யார்? ஆனால் முதல் உணவு உங்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் ஆற்றலை அதிகரிக்க வேண்டும். எனவே சர்க்கரை சேர்க்கபப்ட்ட காபியை தவிர்த்து, காபியில் சிறிது இலவங்கப்பட்டை, வெண்ணிலா சாறு, ஏலக்காய் போன்ற ஆரோக்கியமான மசாலாப் பொருட்களைச் சேர்த்து பருகவும்.
பாலுடன் தானியங்களை சாப்பிடுவதால் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்தால் அது தவறு. உங்கள் காலை உணவு நீங்கள் நினைப்பது போல் ஆரோக்கியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான தானியங்களில் கூட சர்க்கரை உள்ளது, அடுத்த முறை நீங்கள் வாங்கும் தானியப் பெட்டியின் பின்புறத்தில் எழுதப்பட்டிருக்கும் ஊட்டச்சத்து பற்றிய தகவல்களைப் பார்ப்பதே சிறந்த வழி.